வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ரா உளவு அமைப்பின் புதிய தலைவராகிறார் சஞ்சீவ் திரிபாதி

டெல்லி: அயல் நாடுகளுக்கான இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் தலைவராக சஞ்சீவ் திரிபாதி நியமிக்கப்படுகிறார்.
தற்போது அவர் ரா அமைப்பின் துணைப் பிரிவான விமானப் போக்குவரத்து ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30ம் தேதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்.
தற்போது ரா தலைவராக இருப்பவர் கே.சி. வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிதான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார். இதையடுத்து அவரது இடத்திற்கு திரிபாதி கொண்டு வரப்படுகிறார்.
திரிபாதி வருகிற 31 ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ரா தலைவர் பதவி தேடி வந்துள்ளது.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 1973ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி திரிபாதி. இருப்பினும் பின்னர் அவர் ரா அமைப்புக்கு வந்து விட்டார். ரா அமைப்பின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’