முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் அவர்களை முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகோடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்
.தேசிய கல்வி நிறுவகத்தில் டிப்ளோமா பட்டம் பெற்ற 100 முன்னாள் பேராளிகள் கிரிஸ்மஸ் தினத்தன்று சமூகத்தோடு ஒன்றிணைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தொகையான முன்னாள் போராளிகள் இலங்கை மத்திய போக்குவரத்து சபையில் சாரதிகளாக இணைக்கப்பட்டு யாழ். கோண்டாவில் பஸ் நிலையத்தோடு இணைக்கப்படவுள்ளதாக பிரிகோடியர் சுனந்த ரணசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 11000 க்கும் மேற்பட்ட விடுதலை புலி பேராளிகள் சரணடைந்தனர். இவர்களில் 4649 பேருக்கே தற்போது புனர்வாழ்வளிக்கப்படுகின்றது. ஏனைய அனைவரும் அவர்களின் குடும்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகள் 703 பேரை மேலதிக விசாரணைகளுக்காக ஒமந்தை முகாமிற்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் போரளிகளை புனர்வாழ்வினூடாக மறு வாழ்விற்கு கொண்டுவருதற்கு முயற்சிப்பதுடன் வாழ்க்கை திறன் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’