இடம்பெயர்ந்த மக்களை மீளகுடியேற்றுவதில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா இன்று பாராட்டியுள்ளது.
'யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன்" என அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ் கூறியுள்ளர்.
இலங்கை இராணுவமும் உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளும் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதையும் அமெரிக்கத் தூதுவர் பாராட்டினார்.
கொழும்பில் இலங்கை இராணுவத்துக்கு 5 அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய பின் விடுத்த செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"வடக்கு கிழக்கில் பெருமளவு பகுதிகள் தற்போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எனினும் இன்னும் பெருமளவு வேலை எஞ்சியுள்ளது. இந்நடவடிக்கைகளை மேலும் விரைவாக பூர்த்தி செய்வதற்காக நாம் தொடர்ந்தும் எமது ஆதரவை வழங்குவோம்" என அவர் கூறினார்.
"மீள்குடியேற்றத்திற்கு கண்ணிவெடிகளை அகற்றுவது அத்தியாவசியமாகவுள்ளது. கண்ணிவெடிகள் இருந்தால் மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாது. விவசாய நடவடிக்கைளில் ஈடுபட முடியாது. மக்கள் கிணறுகளில் வெடிப்பொருட்கள் இருப்பது குறித்து அஞ்சவேண்டியிருக்கும். கண்ணிவெடிகளை சிறார்கள் விளையாட்டுப் பொருட்கள் என நினைத்துவிடலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’