இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக இடம்பெயர்ந்து
வவூனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் தற்போது சுமார் 20 ஆயிரம் பேர் தவிற மற்றவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு கூறுயுள்ளது.
விடுதலைப்புலிகளின் மிகவும் பலமான இடங்களில் ஒன்றாக இருந்த முல்லைத்தீவு உட்பட வடக்கின் பகுதிகள் 10 மாதங்களுக்கு முன்னர் வரை ஆட்கள் அற்ற இடங்களாகவே இருந்து வந்தன.
தற்போது அங்கு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
அந்தப் பகுதிகளில் தங்குமிட வசதி, நீர், உணவு மற்றும் வாழ்க்கைக்கான ஏனைய வாய்ப்புக்கள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய அலுவலகம் கூறுகின்ற போதிலும், அரசாங்கம் தமது இருப்பிடங்களுக்குத் திரும்புபவர்களுக்கு ஓரளவு நிதியுதவியும், கட்டிட நிர்மாணப் பொருட்களையும் கொடுக்கிறது.
அத்துடன் இன்னமும் தமது இடம்பெயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு அரசாங்கம் நியாயமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வதாகவும் ஐ நா கூறுகிறது. இன்னமும் முகாம்களில் இருப்பவர்கள் தமது இருப்பிடங்களுக்கு தற்காலிகமாக சென்று பார்த்து வரவும் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்கிறது.
இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்கோ அல்லது வடக்கின் பெரும்பாலான பகுதிகளுக்கோ செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை தொடர்ந்து நிலவுகிறது.
இந்த பாதுகாப்பு அமைச்சுத்தான், தற்போது இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அரச சார்பபற்ற நிறுவனங்களின் பதிவுகளையும் பேணுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’