மட்டக்களப்பு கரவெட்டி பிரதேசத்தில் காட்டுப் பன்றி வேட்டையாடச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவன் ஒருவன் காயமடைந்தது போன்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்தள்ளார்.
மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வர்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அருகாமையில், கடந்த 15 ஆம் திகதி மாலை 4 மணிக்கு வவுணதீவு பொலிஸில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்; காட்டுப்பன்றி வேட்டையாடிய போது தவறி பாஸ்கரன் விஜயகுமார் என்ற 13 வயது மாணவனுக்கு வெடிப்பட்டுள்ளது.
நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, இப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும், மக்கள் குறித்த இடத்துக்குச் சென்று பார்க்கும் போது மிருகங்கள் வேட்டையாடப்படு வருவதாகவும், தெரியவந்துள்ளது.
இப்பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’