கண்டியில் ஆபாச இணையத்தளங்களின் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருந்த நால்வருக்கு தலா 2500 ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஆபாச இணையத் தளங்களிலிருந்து காட்சிகளைப் பதிவிறக்கம் செய்தல், பதிவேற்றம் செய்தல் போன்றவற்றைக் கண்காணிக்கவென கண்டியில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் கண்டி பகுதியில் பல்வேறு கணனி திருத்துமிடம் மற்றும் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம், பழுது பார்க்குமிடம் என்பவற்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
அவ்வாறு சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’