இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை அபிவிருத்தி சமூக கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி தொழில் வாய்ப்பினையும் பயிற்சியினையும் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவொன்றினை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இவ்வாறு ஆஜர்படுத்திய மூவரில் யுவதியொருவரும் மேலுமொரு நபரும் நேற்று 15 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கொழும்பு டெவலொப்மென்ட் ஜெப்ஸ் பெங்கிங் மெனேஜ்மென்ட் ட்ரவல் மற்றம் சூரியன் ,சக்தி சோஸல் சென்டர் என்ற பெயரில் நோர்வூட் நகரில் இயங்கி வந்த இந்தத் தொழிற்பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்பு நிலையத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றில் அமைச்சர் தொண்டமானின் புகைப்படமொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ்ச் செயற்படுகின்ற பிரஜா சக்தி மற்றும் நவசக்தி திட்டத்தின் முகாமையாளர் நகுலேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் ஆலோசனைக்கேற்ப நோர்வூட் மற்றும் அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்களை கைது செய்து அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அத்துடன் அச்சி இயந்திரம், ஸ்கேனர் உட்பட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக நோர்வூட் மற்றும் அட்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’