வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 டிசம்பர், 2010

மனித உரிமை மீறல் செயல்களில் எல்.ரீ.ரீ.ஈ. ஈடுபட்டது: அமெரிக்கா

விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற ஆவணத்தில் எல்.ரீ.ரீ.ஈ. யினால் மேற்கொள்ளப்ட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும், இதனை கண்காணிப்பு குழு கண்டும் காணாமல், பாராமுகமாக இருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் செயற்பட்ட சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் செலவு செய்த பணத்தின் ஒரு பகுதியை புலிகள் தமக்கு தரும்படி கேட்டனர்.
பலவந்தமாக படைக்கு ஆட்சேர்க்கும் முறை அங்கு காணப்பட்டது. அத்துடன் அவ்வியக்கத்தில் சேர மறுத்தவர்கள் இரவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர் என்று இலங்கையிலுள்ள அமெரிக்கா தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்ததாக ஒரு கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18௩5 வயதுக்கிடைப்பட்ட ஒருவரையாவது போராட்டத்திற்கு தரும்படி எல்.ரி.ரி.ஈ.யினர் கேட்டனர். கட்டாய ஆட்சேர்ப்பிற்குள்ளாகுபவர்கள் 18 வயதினைக் கடந்தவர்களை இராணுவ சேவைக்கு சேர்க்கப்படுவது குறித்து சர்வதேச சமூகம் கேள்வி கேட்க முடியாது என அவர்கள் நம்பினர்.
குறிப்பிட்ட முகாம்களில் சேவைக்காக இணையும்படி எல்.ரி.ரி.ஈ.யினர் எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்தனர். தவறுபவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டனர்" என அமெரிக்கத் தூதரகத்திற்கு மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை இவ்வருட ஆரம்பத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு பரிமாறப்பட்ட கேபிள் தகவல் குறிப்பொன்றில் அண்மைக்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், காணாமல் போகும் சம்பவங்களின் எண்ணிக்கை ஆகியனவற்றில் திடீர் முன்னேற்றம் காணப்படுவதாக அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு கேபிள் குறிப்பல் இலங்கையில் போரில் ஈடுபட்டுள்ள அரசாங்கமோ தமிழ் பிரிவினைவவாதிகளோ சர்வதேச சமூகம் குறித்து கரிசனை ஏதும் கொண்டிருக்கவில்லை என இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு எச்சரித்ததாகவும் கொழும்பு அரசாங்கத்திற்கான சீனாவின் உதவிகள் குறித்து விபரங்கள் கோரியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’