வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 டிசம்பர், 2010

டென்மார்க் குளோபல் மெடிகல் எய்ட் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் சந்திரகாந்தன் புறப்பட்டார்.

டென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மெடிக்கல் எய்ட் உடனான சந்திப்புக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்த்திரகாந்தன் மற்றும் அவருடைய செயலாளர் அசாட் மெளலானா ஆகியோர் வந்திருந்தனர்.
எதியோப்பியாவில் இடம்பெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் ஐரோப்பிய பயணத்தையும் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (Dec 23, 2010) ஹோபன்ஹேகனில் இருந்து புறப்பட்டார்.குளோபல் மெடிகல் எய்ட் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மூன்று மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருந்துப் பொருட்களை வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்த மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தது. மேலும் இவ்விநியோகமும் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் சர்வதேச தரத்தில் இருந்ததால் தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப குளோபல் மெடிகல் எய்ட் முன்வந்தது. மருந்துப் பொருட்களின் விநியோகத்தை கிழக்கு மாகாண சபையின் ஆதரவுடனும் அரசாங்கத்தின் உதவியுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வினியோகிப்பதற்கு குளோபல் மெடிகல் எய்ட் தீர்மானித்தது.
குளோபல் மெடிக்கல் ஊடாக பெறப்படும் மருந்துப் பொருட்கள் வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக கடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.
இந்த மருந்துப் பொருட்களை இலங்கையில் பொறுப்பேற்று கிழக்கு மாகாணத்தில் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்பாட்டை மேற்கொள்ளவே முதலமைச்சர் சந்திரகாந்தனும் அவரது செயலாளரும் டிசம்பர் 22ந் திகதி டென்மார்க் வந்திருந்தனர். மேற்படி விடயங்களை நிறைவுசெய்த பின்னர் அவரது டென்மார்க்கிலுள்ள ஆதரவாளர்களை சந்தித்த அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் சம கால அரசியல்நிலை தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் அவர்களினது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிஸ் புறப்பட்டு சென்றனர்.
முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் வருவது வெளிவந்ததும் அவர்மீது மனித உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்யப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. மேலும் முதலமைச்சர் சந்திரகாந்தனை தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’