வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 டிசம்பர், 2010

மனித கடத்தலை தடுப்பதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்தும் கண்காணிப்பு

ற்போது மனிதக் கடத்தல்கள் குறைந்துள்ள போதும் இந்து சமுத்திரப் பகுதியில் மனித கடத்தல்களை தடுக்கும் நோக்கத்தில் இலங்கை கடற்படை கண்காணிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கடற்படைத் தளபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-
"விடுதலைப் புலிகள் உட்பட மனிதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்வதற்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்திய கடற்படைகள் எமது கடற்படைக்கு ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றன.
நாட்டின் கடல் எல்லையை கடப்பதற்கு வசதியானவை என்று கருதப்படும் இடங்களை நாம் கடுமையாகக் கண்காணிக்கின்றோம். இவர்கள் நாட்டின் தென்பகுதியில் பல்வேறு புதுப்புது இடங்களுடாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
மனிதக் கடத்தலை பூரணமாகத் தடுக்க முடியாது. அவர்கள் இப்போது விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து படகுகள் மூலம் தாம் போக விரும்பும் நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இலங்கை கடற்படையின் வைர விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய கடற்படைத் தளபதி, மனிதக் கடத்தலை தடுப்பதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டியதாகவும்" கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’