வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஐக்கிய ராச்சியத்தில் தடை செய்யப் பட்டிருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்

டந்த வார ஒக்ஸ்போட் சங்கப் படுதோல்வி இரண்டு விடயங்களைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அவையாவன
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிரித்தானியாவில் தடை செய்யப் பட்ட ஒரு இயக்கமல்ல. மேலும் ஒக்ஸ்போட் சங்கம் ஒரு அரச தலைவருக்கு உதவுவதைக் காட்டிலும் அவ்வியக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கத்தை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பாத்திரமானது அரசாங்கத்தை எதிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை எதிர்ப்பது அல்ல.
இரண்டாம் உலகப் போரின் பின்பு அல்பட் அயன்ஸ்டீன் கூறியது,” மூன்றாவுது உலகப் போரில் எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் நாலாவது உலகப் போரின் போது நிச்சயமாகத் பொல்லுகளாலும், கல்லுகளாலும் தான் போரிடுவார்கள்” மேலும் டுவிட் ஐஸ்னோவர் சொல்லியிருப்பது” மூன்றாவது உலகப் போரின் பின்பும் உயிர்; வாழ்வதற்கு ஒரே வழி அது ஏற்படாமல் தடுப்பதுதான்”

இதன்படி ஆருடம் சொல்லப் படுவது இன்னொரு யுத்தம் ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை ஆள நினைக்கும் நாடுகளால் நடத்தப் படும்போது ஆயுத சக்தியின் எல்லை எதுவென அந்த நாடுகள் உணரும்போது நாகரிகத்தற்கு ஒரு முடிவு ஏற்படும். எனவே உலகில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டி தேவையில்லாமல் அவர்கள் சுவீகரித்துக் கொண்ட புதிய மேற்கோள் வாய்பாடுகள்தான் இவைகள்.

இப்படிச் செல்வதின் கருத்து யாதெனில் அதாவது யுத்தத்தின் மூலம் கூடி வாழும் தன்மையுடைய ஒருநாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாற்றீடு செய்யப்படுகிறது.

எப்படியாயினும் கூடி வாழுதல் என்பதன் கருத்து சமத்துவம் என்பதாகும். மேலும் அதற்குத் தேவையானது உலக வளங்களையும் வாய்ப்புக்களையும் ஒவ்வொரு நாட்டுக்கும் சமமாகப் பங்கிடவேண்டிய அவசியம். இது பணமும் அதிகாரமும் உள்ள நாடுகளால் சரியாகப் பேணப் படுவதில்லை. அவர்கள் எப்போதும் தமது நாட்டையும் மக்களையும் ஒருவகை உயர்வான தன்மையினால் மகிழ்வித்து வருகிறார்கள்.

அத்துடன் இதுவரையான காலத்தில் அவர்கள் பெற்றிருக்கும் நன்மைகளையும், சிறப்புரிமைகளையும் விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. இப்படியாக அரசியல் ஆணவப் பிடிவாதக் கொள்கைகளால் மாற்றீடு செய்யப்படுவது அடக்கி ஆளும் காலனித்துவக் கொள்கைகளே.

மற்றும் உலகின் உயர் அதிகார சக்திகள் மற்றைய நாடுகளுக்குள் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை மீறல் என்கிற பெயர்களில் எல்லைமீறி நுழைகிறார்கள். இப்படித்தான் அமெரிக்கா வியட்னாம் மக்களை கம்யுனிசத்திலிருந்து விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு வியட்னாமை ஆக்கிரமித்தது. அந்த 20வருட நடவடிக்கையில் இரண்டாம் உலகப் போரின்போது கூடப் பயன் படுத்தப்படாத பலவகை ஆயுதங்களையும் குண்டுகளையும் பயன் படுத்தி மூன்று மில்லியன் வியட்னாமியர்களைக் கொன்று குவித்தது.

முடிவில் அமரிக்கா வியட்னாம் மக்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் இந்தத் தோல்வி முன்னாள் காலனித்துவ சக்திகள் இந்தக் கட்டத்தில் உலகை ஆதிக்கம் செலுத்த அரசியலை (புதிய உலக மதிப்பின்படி) பயன்படுத்த முனைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன்படி அவர்கள் உலகெங்கிலுமுள்ள பிரதானமாக முன்னாள் குடியேற்ற நாடுகளிலுள்ள விடுதலை இயககங்களுக்கு உதவி செய்தார்கள். ஏனெனில் அந்த நாடுகளில் உள்நாட்டுச் சச்சரவுகள் இருப்பதை உறுதி செய்து அந்நாடுகள் குறிப்பிட்ட மட்டத்துக்கு மேல் வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த முயற்சிகள் மூன்றாம் உலக நாடுகளில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்களைக் கொன்று தள்ளியது. இதன்படி இது ஆதாயமுள்ள ஒரு ஆயுத வியாபாரமாகவும் அதேநேரம் மூன்றாவது உலகத்தை எப்போதுமே அபிவிருத்தி அடையவிடாமல் தடுக்கும் ஒரு வழியாகவும் இரண்டுக்கும் பயன் பட்டது.

எப்படியோ அல்கைதா நியுயோர்க்கிலும் லண்டனிலும் குண்டு வீசியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் நெருக்கடிக்கு அவர்களைத் தள்ளி விட்டது. இதன் பிறகு குறைந்த அதிகார சக்தி கொண்ட நாடுகளை அரசியல் மூலம் குழிபறிப்பதிலிருந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரட்டமாக மாற்றம் பெற்றது. அதுதான் உலகிலுள்ள பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்வதாகச் சொல்லப் பட்டது. இந்தத் தடையானது எப்படியாயினும் இரட்டைப் படிநிலைகளில் நடைமுறைப் படுத்தப் படுவதை இன்றும் நம்மால் காணமுடிகிறது.

உலகின் முதல்தர பயங்கரவாத இயக்கம் அறிவாளிகளின் கருத்துரைக்கும் மண்டபமாகக் கருதப்படும் ஒரு பிரசித்தமான சர்வகலாசாலையின் நிகழ்ச்சிகளை நடக்க விடாமல் தடுப்பதற்கு மீட்பு விலையாக லண்டன் நகரையே பிடித்து வைக்க முயன்றது. அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை காவிச் சென்றதும் மற்றும் அதன்படி ஐக்கிய ராச்சியத்தில் தடை செய்யப் பட்டிருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல. ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்

எப்படியாயினும் ஸ்ரீலங்கா வாசிகளுக்கான முக்கிய பாடம் நாட்டிலிருந்து அப்புறப் படுத்தப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் அரசியல் தீர்வு என்ற பெயரில் கூட தலை தூக்காதவாறு உறுதிப் படுத்துவதுதான். மேலும் லண்டனை தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் அங்கு பயங்கரவாதத்தை மேற்கொள்ளச் சுதந்திரம் உள்ளது. பயங்கரத்திலிருந்து விலகியிருக்க சிறிய விலை மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா எதிர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது. சமீபத்தில் அதனால் தாக்கப்பட்டிருப்பவர் கரு ஜயசூரியா. இதற்காக அவர் தெரிவு செய்திருப்பது சர்வதேசத்தால் ஸ்ரீலங்கா அரசின்மீது சுமத்தப் பட்டிருக்கும் யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து தற்காத்து விடுவித்துக் கொள்ள அரசு முயல்வதை மக்கள் எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தை.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரமான யுத்தக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மனிதருக்கு ஆதரவளித்து விட்டு இன்னமும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நினைப்பது வஞ்சப் புகழ்ச்சி அல்லவா. ஸ்ரீலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சி பொன்சேகாவுக்கு ஆதரவாக ஊhவலங்களை நடத்தி அவரை யுத்த நாயகன், நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டவர் எனப் பாராட்டி விட்டு லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து யுத்தத்தில் போராடியவர்களை சர்வதேச நீதிவிசாரணை முன் கொண்டு வரவேண்டும் என கூப்பாடு போட்டார்கள். இந்த அரசியல சுயநலவாதத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி எப்போது விடுபட்டு வரப்போகிறது.

எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க முடியும்?. அந்த முன்னணியானது ஜூலை 83ல் நடந்த கலவரங்களை தடுக்கத் தவறியது முதல் 88 – 89 களில் நடந்த முற்றுகைக்கு கட்டியம் கூறும் காரணகர்த்தாவாக இருந்தது வரையான மிக மோசமான பதிவுகளைக் கொண்டிருக்கிறதே.

88 – 89 கள் தான் இந்த நாட்டின் சரித்திரத்தில குடிமக்களின் அமைதியின்மை ஏற்பட்ட மிக மோசமான காலம் அந்தக் காலம்தான் மனித உரிமைகள் வெறும் மீறல்களாக பார்க்கப் பட்ட காலம்.

அன்றைய அந்த நிலைதான் அனிதா பிரதாப்பை ஸ்ரீலங்கா நிலமைகளைப் பற்றி ஒரு புத்தகமே எழுத நிர்ப்பந்தித்ததுடன் அவர் அந்தப் புத்தகத்துக்கு மிகவும் பொருத்தமான தலைப்பாக இரத்தம் தோய்ந்த தீவு எனப் பெயரிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு நிமிடமும் திரும்பவும் பிறக்கிறார்கள் போலத் தெரிகிறது. மற்றும் விரிவான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள அவர்கள் சுவீகரிக்கும் மாறுபட்ட நிலைப்பாடுகள் கட்சியிடம் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றிய சரியான கொள்கைகள் எதுவுமில்லை எனக் காட்டுவதுடன், அவர்களது ஒரே கொள்கை சட்டபூர்வமாகவோ சட்டபூர்வமற்ற வழியிலோ அதிகாரத்துக்கு வருவது மட்டுமே.

எப்படியாயினும் ஜயசூரியா தற்போதைய அரசாங்கம் ஆசியா மற்றும் சோசலிச நாடுகளுடன் மட்டுமே உறவுகளை வளர்த்து வருகிறது மேற்குடன் அது நட்புறவுடன் இல்லை எனும் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஒரு பதிலுக்கு அருகதைப்பட்டவராகிறார். அவர் கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தனா காலத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையை திரும்பிப் பார்க்க வேண்டும்.

அப்போதைய போக்லாந்து பிரச்சனையில் பிரித்தானியாவுக்கு மிகவும் அடிமைத் தனமாக ஆதரவு தெரிவித்த ஒரே நாடு இந்த நாடு என்பதை குறிப்பிட வேண்டும்.அதுகூட அந்த நேரத்தில் திருமதி. காந்தி இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உள்நடத்தையாளாக இருந்து எங்களைத் தண்டிக்க தெரிவு செய்திருந்த நேரம்.

ஆனால் இந்தியா எங்கள்மீது பருப்பு மூலம் படையெடுத்த போது என்ன நடந்தது? மேற்குலகம் எங்களைப் பாதுகாக்க வந்ததா?

எமது நாட்டை மேற்குலகின் ஒழுக்கில் கொண்டுவர முயற்சிக்கும் போது உருவாகும் ஆபத்தானது, மேற்கும் ஐக்கிய தேசியக் கட்சியைப் போல தங்களதுஇலாபததைத் தவிர வேறு கொள்கைகள் எதையும் கொண்டிராதது. அவர்கள் எங்கள் இறைமையையும் சமத்துவத்தையும் மதிக்க மாட்டார்கள், ஆனால் அவர்களில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் வேலைக்காரனாக இலங்கை இருப்பதையே விரும்புவார்கள்.

தமிழில் எஸ்.குமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’