வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 டிசம்பர், 2010

சேதமடைந்த கட்டிடங்களை புனரமைப்பதற்கு முன்னுரிமை; வீட்டுத்திட்டங்களுக்கு பாதிப்பில்லை: பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

டக்கு கிழக்கில் வெளிநாட்டு நிதியுதவியுடன் தற்போது மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணப் பணிகள் எவையும் நிறுத்தப்பட மாட்டாது எனவும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு பதிலாக பழைய கட்டிடங்களை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

நன்கொடையாளர்களின் நிதியுதவியில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக அவ்வமைச்சு விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள 50000 வீடுகளை அமைக்கும் திட்டமும் இதனால் பாதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார விடுத்துள்ள இவ்வறிக்கையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் அல்லது புதிய வீடமைப்புத் திட்டங்கள் எதையும் நிறுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. அமைச்சின் சுற்றுநிருபத்தில் வீடுகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே உலக வங்கியின் கடனுதவியுடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் 50000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கும் 5000 வீடுகளை நிர்மாணிப்பதுடன் 45000 வீடுகளை புனரமைப்பதையும் கொண்ட இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்திற்கும் இது (சுற்றுநிருபம்) பொருந்தமாட்டாது.
தற்போது வடக்கில் பலநூறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இக்கட்டிடங்களை புனரமைப்பது அவசர தேவையாகவுள்ளது. ஆனால் சேதமடைந்த கட்டிடங்களை புனரமைப்பதற்கு முன்னுரிமையளிப்பதற்கு பதிலாக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை பொறுப்பேற்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே மேற்படி சுற்றுநிருபம் வடக்கு கிழக்கில் புதிய கட்டிட நிர்மாணங்களுக்கு பதிலாக சேதமடைந்த கட்டிடங்களை திருத்துவதுற்கு முன்னுரிமையளிப்பதற்கானது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணத் திட்டங்கள் மேற்படி தீர்மானத்தால் பாதிக்கப்பட மாட்டாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’