சாதாரண நடைமுறைக்கமைய ஐ.நா. நிபுணர்கள் குழுவின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்குத் தயாரென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா. நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்து அதற்கான வசதிகளைச் செய்துகொடுக்குமாயின் அக்குழுவின் வாக்குமூலங்களை தமது சாதாரண நடைமுறைக்கமைய பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. நிபுணர்கள் குழுவின் வருகைக்கு தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’