வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தில்லைச் சிதம்பரமும் ஈழத்துச் சிதம்பரமும் நூலின் முதற்பிரதி அமைச்சரிடம் வழங்கப்பட்டது!

தில்லைச் சிதம்பரமும் ஈழத்துச் சிதம்பரமும் நூல் வெளியீட்டு விழா இன்று காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் வருடாந்த தேரோற்சவமான இன்றைய தினத்தில் இந்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் முதற் பிரதியினை தொகுப்பாசிரியர் பொன்னம்பலம் வெளியீட்டு வைக்க அதனை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு பிரதிகளை யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து தேர்த்திருவிழாவான இன்றைய நிகழ்வில் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

நூலில் கோயிலின் தொன்மை வரலாறு சிவன் வழிபாடு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள சிவன் ஆலயங்களில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’