வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமாயின் மீண்டுமொரு பயங்கரவாதம் உருவாகும்: விஜித ஹேரத்

லங்கையில் தேசிய கீதமானது சிங்களத்தில் மட்டும் இசைக்க வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் நாட்டில் இனத்துவத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் காரணியாக அரசாங்கத்தின் தீர்மானம் அமைந்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நாவலவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்றும், இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம், எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் தேசிய கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு எந்த நாட்டிலும் தேசிய கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக் காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது கருத்து தெரிவிக்கும் போது விஜித ஹேரத் எம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’