வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 டிசம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை: சுமந்திரன்

ல்லிணக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலவோட்டத்தில் சரணடைந்திருக்கின்ற புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் அது அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் என்பதுடன், கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

குற்றஒப்புதல் வாக்குமூலம் இல்லாமல் எவரையும் தடுத்து வைத்து புனர்வாழ்வளிக்க முடியாது. சரணடைந்தவர்கள் ஓரளவிற்கு குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எனினும் அவ்வாறு தடுத்து வைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் இது பொருத்தமானது அல்ல ஏனெனில் அதில் ஒருவரேனும் சரணடையாதவராக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தின் சனிக்கிழமை நடைபெற்ற நீதியமைச்சு,புனர்வாழ்வளிப்பு ,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’