ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூர்தீன் மசூரின் ஜனாசாவைப் சொந்த இடத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம்
காலஞ்சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் ஜனாசாவைப் சொந்த இடத்திற்று கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நூர்தீன் மசூரின் ஜனாசாவைப் பார்ப்பதெற்கென பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தற்போது பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வெளி ஊர்களிலிருந்தும் பஸ்கள் மற்றும் வாகனங்களிலும் அதிக எண்ணிக்கையிலானோர் அங்கு வந்த வண்ணமுள்ளனர்.
அங்கு ஒரே சோகமயமாகக் காட்சியளிக்கின்றது. அங்குள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்இ வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாய் உள்ளது. புத்தளம் பாலாவி போன்ற பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள்இ பஸ்கள் மற்றும் வாகனங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
மறைந்த நாடளுமன்ற உறுப்பினருக்கு மன்னார் மக்கள் அஞ்சலி
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நூர்தீன் மசூருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மன்னார் பகுதிகளில் உள்ள தமிழ்,முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு வர்த்தக நிலையங்களில் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்காண மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’