பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடிவொன்றை நேற்று வெளியிட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் இந்த வீடியோ உண்மையானது அல்ல எனக் கூறியுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தையொட்டி துர்நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளது.
கண்கள் கட்டப்பட்ட நிர்வாண நபர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோவொன்றை 16 மாதங்களுக்கு முன்னனர் சனல் 4 வெளியிட்டிருந்தது. புதிய வீடியோவும் அதே சம்பவம் தொடர்பானது எனினும் இக்காட்சிகளில் குறைந்தபட்சம் 7 பெண்களின் நிர்வாண சடலங்களும் உள்ளன.
ஆனால் இந்த வீடியோ உண்மையானது அல்லவென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வருடம் சனல் 4 செய்திஅலைவரிசை இதேபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. அது உண்மையானது அல்ல, போலியானது என தொழில்நுட்ப காரணங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தெளிவாக உறுதிப்படுத்தியது. தற்போதைய வீடியோவும் மேற்படி வீடியோவின் நீட்டப்பட்ட பதிப்பே அல்லாமல் வேறொன்றுமில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தையொட்டி திட்டமிடப்பட்ட துர்நோக்குடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.'
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’