யாழ். சங்கானை பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று இரவு 8 மணியளவில் பூஜை கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரும் அவரின் இரு மகன்கள் மீதும் 200CC மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த மூன்று பூசகர்களும் இரவு 9.10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேர இணையத்தளத்திற்கு தெரிவித்தர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’