கொழும்பு மாளிகாவத்தையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற மர்மக் கொலையுடன் தொடர்புடைய இருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்
.2007 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு மாளிகாவத்தையில் மர்மமான முறையில் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரை இன்று கைது செய்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சற்றுமுன் இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு பிரதான சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’