வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 டிசம்பர், 2010

30 வருடங்களின் பின்னர் யாழில் பௌத்த தமிழ் சங்கம்

யாழ். மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் 30 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சங்கத்தின் இணைப்பாளர் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

1952ஆம் ஆண்டு நிஷங்க விஜயரட்ண என்பவர் யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த காலத்தில் பௌத்த தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கத்தின் தலைவராக யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த எஸ்.வைரமுத்து நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்றுவரை அவர்தான் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இப்போது அவருக்கு வயது 93. வயோதிபத் தளர்வால் அவர் இப்போது செயற்பட முடியாதவராக உள்ளார்.
'யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்'' என்கிறார் புதிய இணைப்பாளர்.
யாழ். நாகவிகாரையைத் தலைமைப் பீடமாகக்கொண்டு இயங்கிய இந்தச் சங்கத்திற்கு அச்சுவேலி, புத்தூர், கரவெட்டி ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்கள் காணப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’