கொழும்பு தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்து இன்னும் 2 மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்தார்.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் நவீன மக்கள் தொடர்பு அலுவலகத்தை மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் திறந்துவைத்தார். மேலும், இணையத்தளத்தின் மூலமாகப் புகார்களை தெரிவிக்கும் வசதியையும் தொடக்கிவைத்தார்.
சென்னை எண்ணூர் மணலி இடையேயான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான 21 கோடி ரூபாவுக்கான காசோலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் மணலி இடையேயான சாலைப் பணிகள் வரும் ஜனவரி மாதம் ஆரம்பித்து 2013ஆம் ஆண்டு நிறைவடையும். தூத்துக்குடி கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட சென்னையில் கொள்கலன் பாரவூர்திகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருவொற்றியூரில் சுமார் 12 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு பாரவூர்திகளுக்கான தரிப்பிடம் அமைக்கப்படும். சென்னை துறைமுகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’