சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 175 பேர் இன்று ஆரம்பமான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதாக புணர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இவர்கள் தங்கியிருந்த புனர்வாழ்வு முகாம்களில் வைத்தே பரீட்சைகள் இடம்பெறுவதாகவும், இதில் 130 ஆண்களும், 45 பெண்களும் அடங்குதாக தெரிவித்தார்.
இதேவேளை நடைபெற்று முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 360 பேர் பரீட்சைக்கு தோற்றியதாகவும், இவர்களில் 211 சித்தியடைந்ததாக மேலும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’