வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 நவம்பர், 2010

வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய வாக்கெடுப்பில் த. தே. கூட்டமைப்பு பங்குபற்றாது

ரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றாது என அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரமேச்சந்திரன் இன்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 2 ஆம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடி ஆராய்ந்தது. நாடளுமன்றத்தில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது தமிழ் மக்களுக்கு விசேடமாக இடம்பெயர்ந்து இன்னல் உற்று இருக்கும் மக்களுக்கு எந்த விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை.
இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதுதான் தனது முன்னுரிமையென அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் இக்கூற்று எந்த வித்திலும் பிரதிபலிக்கவில்லை.
வடக்கு கிழக்கை சேர்ந்த எமது மக்கள் பல வருடங்களாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சொல்லொணாத் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுடைய மீள்குடியேற்றமென்பது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அதி முக்கிய கடமையாகும். இந்த வரவு செலவு திட்டத்திலும் மீள்குடியேற்றம் புனருத்தாரன வேலைகள் தொடர்பாக ஆக்க பூர்வமான கருத்துக்கள் எதுவும் இல்லை. இந்த வரவு செலவு திட்டமும் கூட அக்கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறியுள்ளது.
இதற்கு மேலாக பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு என்பது போர் முடிவடைந்த நிலையிலும் வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கின்றது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாம் இவற்றை ஆராய்ந்;து பார்த்த போது இந்த வரவு செலவு திட்டத்தை எந்த அடிப்படையிலும் ஆதரிக்க முடியாது என்பதே எமது உறுதியான தீர்மானமாக இருந்தது.
இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்;து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதுவித சந்தேகமும் இன்றி இவ்வரவு செலவு திட்டத்தை கண்டித்து பேசியுள்ளனர். தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கொடுக்காத இந்த வரவு செலவு திட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பது எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்தாக இருந்தது.
தமிழ் மக்களின் உடனடி மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற அதி முக்கிய விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்பதை ஆரம்ப காலம் தொடக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இது வரை அரசாங்க தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.
இந்த அரசாங்கம் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் எமது நல்லெணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் இன்றைய இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’