வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன, பாரிய குற்றம் இழைத்த ஏனைய கைதிகளை விட மோசமாக நடத்தப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று உதுல் பிரேமரட்னவை பார்வையிட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் பேச்சாளர் சஞ்சீவ பண்டார, உதுல் பிரேமரட்னவை சந்திப்பதற்கு தனக்கு மாத்திரம் அரை மணித்தியால நேர அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனி சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொலை போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடாவிட்டால் வழமையாக கைதிகள் ஏனையோர்களுடன் சேர்த்தே தடுத்துவைக்கப்படுவர். ஆனால் உதுல் பிரேமரட்ன எந்தவித பாரிய தவறும் இழைக்கவில்லை. இலவச கல்வித் தி;ட்டத்தை ஊக்குவித்ததுடன், மாணவர்கள் மீதான அடக்குமுறையை ஒழிக்கும் முயற்சியில் உதுல் பிரேமரட்ன முக்கிய பங்காற்றியதாக சஞ்சீவ பண்டார கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’