இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மதத்தலைவர்கள் தவறிவிட்டனர் என சமூக அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளரும் பத்தி எழுத்தாளருமான பி.முத்துலிங்கம் தெரிவித்தார்.
லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த முத்துலிங்கம்,
இந்தியாவில் பல இனங்கள் காணப்படுகின்ற போதும் அவர்கள் மத்தியில் இந்தியன் என்ற உறுதி காணப்படுகின்றது. இக்கொள்கையை எம்மவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
சில தசாப்தங்களுக்கு முன்னர் பாடசாலைகள் முழுவதும் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட்டது. அன்று மக்கள் மத்தியில் பிளவுகள் காணப்படவில்லை. ஆனால் தபோது பல மொழிகள் மூலம் கற்பிக்கப்படுவதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனது மகன் கண்டி நகரின் பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வருகின்றார். இப்பாடசாலையின் மற்றைய மொழிப் பிரிவு சகல வளங்களுடன் நன்றாக செயற்படுகின்றது. எனினும் தமிழ் பிரிவில் குறைபாடுகள் காணப்படுகின்றது.
இங்குள்ள மதத்தலைவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்கை தொடர்பாக ஆராய வேண்டும். அதனூடாக இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர்.
இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த ஆணைக்குழு சிபாரிசுகளை முன்வைக்க வேண்டும். இல்லாவிடின் இது போன்ற பல ஆணைக்குழுக்களை நியமித்து நேரத்தை வீண்டிக்க நேரிடும் என்றார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.கலுபெஹன சாட்சியமளிக்கையில்:
ஜனாதிபதி பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத்தின் போது அனைத்து அமைச்சர்களையும் வார இறுதி நாட்களில் வவுனியாவுக்கு சென்று அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிணங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் அங்கு சென்று பல்வேறுபட்ட விடயங்களை மேற்கொண்டனர். இதனால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.
இதனால் தமிழ் மற்றும் சிங்கள் மக்கள் மத்தியில் சந்தேக பார்வை காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’