வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 நவம்பர், 2010

இடைத்தரகர்கள் முகவர் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் -கிங்ஸ்லி ரணவக்க

லங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கீழ் செயற்படும் தரகர்களாக செயற்படுபவர்கள் முகவர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்து முகவர் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு முகவர்களாக செயற்படுபவர்கள் ஒரு முகவர் நிலையத்திற்கு கீழ் மாத்திரமே செயற்பட வேண்டும்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களது பயணக் கடவுச்சீட்டு மற்றும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ள முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இடைத்தரகர்களாக செயற்படும் இவர்கள் தனிப்பட்ட காரியாலயங்களை கொண்டு நடத்த முடியாது. முகவர் நிலையங்களில் பதிவு செய்யும் முகவர்களுக்கு முகவர் நிலையத்தின் பெயரைக் கொண்ட அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’