கோயில் இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது’ என சொல்லுவார்கள் அதேபோல் தெய்வம் இல்லாத கேயிலில் யாருக்கு புலம்பெயர் புலிப் பூசாரிகள் பூசைசெய்யப் போகின்றார்கள்? மற்றைய எல்லா மகாத்மாக்களை விடவும் சூரியதேவனுக்குத்தான் நாம் முதலில் பூசை செய்யவேண்டும். சூரியதேவன்தான் தமிழர்களின் முழுமுதல் கடவுள். சூரியதேவனின் ஒளியில் பரிணமித்ததுதான் தமிழிழமும், தமிழீழத்துக்காக போராடி மடிந்த மாவீரர்களும்.
எங்கட தாயகம், எங்கட தேசம், எங்கட பூமி என கோசம் போடுபவர்கள் எங்கடதேசிய தலைவரை மறந்துபோனது ஏன்?
இந்த வருடமாவது மாவீரர் தினவிழாவில் எங்கள் தலைவர் வே.பிரபாகரனை மாவீரராக ஏற்றுக்கொண்டு இந்த விழாவை சிறப்பிக்காவிட்டால் மாபெரும்போராட்டம் நடத்துவோம். வெளிநாடுகளில் மாவீரர் விழா நடக்கும் மண்டபங்களுக்கு முன்னால் கறுப்புக்கொடி காட்டுவோம் என்பதை விழா நடத்துபவர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.
இந்த வருடமாவது மாவீரர் தினவிழாவில் எங்கள் தலைவர் வே.பிரபாகரனை மாவீரராக ஏற்றுக்கொண்டு இந்த விழாவை சிறப்பிக்காவிட்டால் மாபெரும்போராட்டம் நடத்துவோம். வெளிநாடுகளில் மாவீரர் விழா நடக்கும் மண்டபங்களுக்கு முன்னால் கறுப்புக்கொடி காட்டுவோம் என்பதை விழா நடத்துபவர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.
தலைவரை மாவீராக சேர்த்துக்கொள்வதோடு அவருக்கு தகுந்த பட்டமும் அளித்திடல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். ஆகக்குறைந்தது நாட்டுப்பற்றாளர், கேணல், கப்டன் போன்ற பட்டமாவது வழங்கி அவரை கௌரவிக்கவேண்டும். அல்லது கப்படன் பிரபாகரன் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம் வழங்கியது போன்று எங்கள் தலைவர் கேப்படன் வே.பிரபாகரனுக்கும் டாக்டர் பட்டமளிக்கவேண்டும்.
எங்கட தலைவர் எங்கள் தேசத்தையும், எங்கள் தேச மக்களையும் நாசமாக்கி, மோசமாக்கி போட்டுதான் சிங்களவனிடம் ஒப்படைத்துவிட்டு போனவர். சும்மா சிங்கப்பூர் மாதிரி வைத்திருந்து விட்டு சிங்களவனிடம் கொடுத்துவிட்டு போகவில்லை. எங்கள் தலைவர் அவ்வளவு தந்திரோபாயமானவர். தலைவரின் தந்திரோபாயத்தின் வெளிப்பாடுதான் தனது தாய், தகப்பனை இராணுவத்தினரிடம் சரணடைய வைத்து அவர்களின் உயிரை செல்லடியிலிருந்தும், வீமானக்குண்டு வீச்சிலிருந்தும் காப்பாற்றியது.
பல்லாயிரக்கணக்காண மக்கள் கடைசிக்கட்ட போரினிலே மடிந்தபோதும் தலைவர் தனது தாய் தகப்பனை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறி அவர்களின் உயிரை காப்பாற்றியமையானது எங்கள் தலைவர் தனது தாய், தகப்பன் மேல் மிகுந்த பாசமும் பற்றுமுள்ளவர் என்பதையே நிரூபிக்கின்றது. தலைவர் தனது தாய், தகப்பன் மேல் கொண்ட பாசம்போல் வன்னியிலிருந்த மக்கள்மேல் பாசம் வைத்திருபாராயிருந்திருந்தால் இவ்வளவு சனம் வீணாய் செத்து மடிந்திருக்க மாட்டார்கள்.
இதில் நமது தலைவரை சொல்லி குற்றமில்லை. அவர் யாதுமறியார். மகிந்த ‘இன அழிப்பு’நடத்தியவர். எங்கள் தலைவர், எங்களினத்தை உருவாக்க்கூடிய ஊரில் உள்ள பெட்டையள் அவ்வளவு பேரையும் போரிடவைத்து ‘இனவிரித்தி’ செய்தவர்.
30வருடமாக காலமாக மேற்குலகத்தினருடன் கூட்டுச்சேர்ந்து தீனிபோட்டு போரை நடத்தியதும் புலம்பெயர் புலிபினாமிகள்தான், பின்பு போரை நிறுத்தவேண்டும் என்பதற்காக மேற்குலகத்தினரிடம் அழுதுகுழறி , கையேந்தி நின்று கடைசியில் போரை (சனத்தை) முடித்து வைத்ததும் இதே புலம்பெயர் புலிப்பினாமிகள்தான்.
தலைவர் எங்களுடைய ஒட்டுமொத்த தேசத்தையும எங்களிடமிருந்து விடுதலை பெற்று சிங்களவனுக்கு கொடுப்பதற்காக 30ஆண்டுகளுக்கு மேலாக போராடியிருக்கிறார் என்பதை தலைவரின் பெயரால் மாவீரர் தின விழா நடத்துபவர்கள் மறந்துவிடக்கூடாது. தலைவரின் வழி நடத்தலில்தான் பல்லாயிரக்கணக்காண மாவீரர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்பதால் அவரை சிறப்பிக்கும் வகையில் தலைவரை ‘சிரேஷ்ட’ மாவீரராக பிரகடனம்செய்து அவருக்கு தகுந்த மரியாதை செய்யவேண்டும்.
பிழைக்க வழி தெரியாத தமிழக அரசியல்வாதிகளான நெடுமாறன், கோபாலசாமி, திருமாவளவன் போன்றோர்கள் தங்கள் பிழைப்புக்காக இறந்தவனையே உயிருடன் இருக்கிறான் என்பார்கள், அவர்களின் கதையை நம்பாமல் எங்கள் தலைவர் உண்மையிலேயே வீர மரணம் அடைந்துவிட்டார் என்பதை உறுதிபட பிரகடனப்படுத்திகொண்டு அவரையும் ‘மாவீரர்’ களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு உரிய மரியாதை வழங்கிடல் வேண்டும். அதுவே நீங்கள் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

‘மரணத்தை வென்ற மாவீரர்கள்’ என்றால், கடைசிக்கட்ட போரில் மாவீரர்களாகுவதற்கு தயாராகவிருந்து மரணத்தின் வாயிலுக்கு போக முன்பு ஆயுதங்களையும், சைனைற் குப்பிகளையும் எறிந்துவிட்டு ஆமியிடம் சரணடைந்த 12ஆயிரம் புலிகள்தான் ‘ மரணத்தை வென்ற மாவீரர்கள்’ ஆவார்கள்.
இறந்தவர்களுக்கு இரங்கி மாவீரர் எனச்சொல்லியழுது காசு செலவளிப்பவர்கள் அல்லது காசு சேர்ப்பவர்கள், இறவாமல் உயிருடன் இருக்கும் மாவீரர்களான, இராணுவத்திடம் சரணடைந்து புனர் வாழ்வழிப்பட்டு வெளியேறி பிழைப்புக்கு வழியின்றி வாழ்பவர்கள், போராளிகளாயிருந்து முடமாகி போயிருப்பவர்கள், இப்போராட்டத்தினால் விதவைகளாக்கப்பட்டவர்கள், அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள், போரினால் வாழ்கையையே தொலைத்து வழி தெரியாமல் விழி பதுங்கி நிற்பவர்கள் போன்றோருக்கு வாழ்வதற்குரிய வழிவகையேதும் செய்வார்களா?
கி.பாஸ்கரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’