ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்தும் வட மாகாண புகையிரத அபிவிருத்தி தொடர்பிலும் இரு தரப்பினர்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி.பி.பீ.ஜயசுந்தர வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’