வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 நவம்பர், 2010

கொழும்பில் தமிழர், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? : ஜனாதிபதி கேள்வி

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படி கூற முடியும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியதாக இசந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பங்குபற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி என். குமரகுருபரன் தெரிவித்தார்.
மேல் மாகாண சபை உறுப்பினருமான குமரகுருபரன் , இச்சந்திப்பு தொடர்பாக மேலும் கூறுகையில்,
"வடக்கில் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜனாதிபதி, 'கொழும்பில் தமிழ், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமென்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படி தவறு எனக் கூறமுடியும்' என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமுடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால், சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்களின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’