கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கொழும்பு மருதானையிலுள்ள அமைச்சின் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினூடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் சபையூடாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் குறிப்பாக குடாநாட்டில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதன் பிரகாரம் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தினால் 22.90 மில்லியன் ரூபா நிதி கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சபையினது வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக் கொள்கின்ற பணம் சரியான முறையில் பாவிக்கப்படல் வேண்டுமென்பதுடன் அதன்மூலம் மக்கள் பயனடையக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக யாவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி ஜெகராசசிங்கம் கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் உதயசிறி காரியவசம் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’