இரண்டு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களே மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் புதிய நடைமுறைகளுக்கு முரணானதாக அமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் சவால்களை எதிர்நோக்க நேரிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ரொபர்ட் மெக்காலண்ட் தெரிவித்துள்ளார்.
அதிகளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதனை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’