இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை எனக் கூறப்பட்டு, அல் ஜஸீரா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பலர் சுட்டுக்கொல்லப்படுவதையும் இறந்து கிடப்பதையும் சித்தரிக்கும் இப்புகைப்படங்கள் தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இப்புகைப்படங்கள் புதியவை அல்ல எனவும் ஏற்கெனவே சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட புகைப்படங்களுடன் மேலும் சில படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.
இப்புகைப்படங்களை அல் ஜஸீரா தொலைக்காட்சி உறுதிப்படுத்த முடியாதுள்ளதால் அப்புகைப்படங்களின் நம்பகத் தன்மை மீண்டும் கேள்விக்குறியாகிறது எனவும் அவர் கூறினார்.
மேற்படி புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர் ஒருவரால் பிடிக்கப்பட்டவை எனவும் பெயர் குறிப்பிடப்படாத வட்டாரமொன்றின் மூலம் அவற்றை தான் பெற்றுக்கொண்டதாகவும் அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’