எமது கலை கலாசாரம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மீள் இணக்கத்திற்கும் மேம்பாட்டிற்குமான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றம் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மகுட வாக்கியத்திற்கு அமைவாக அதன் கல்விப் பயணத்தில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்தும் அதேவேளை கடந்த கால யுத்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டவர்களால் அந்தத் தளத்திலிருந்து நாம் முன்னேற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் எமது கலை கலாசாரம் பண்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அனைத்துச் செயற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணைவேந்தர் சண்முகலிங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சென்னை சாய்ராம் பல்கலைக்கழக பேராசிரியர் மாறன் கருத்துரையாற்றினார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’