வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 நவம்பர், 2010

வடக்குகிழக்கு தமிழர்களின் தாயக பூமி கிடையாது சிங்களவர்களின் குடியேற்றம் அவசியம்: ஹெலஉறுமய _

டக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி கிடையாது. சிங்கள மக்களின் உரிமைகளை எந்த சக்தியாலும் தடுக்கவும் முடியாது. எனவே வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்படாவிட்டால் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இன்று அநாதரவான நிலையில் 200 சிங்கள குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் உள்ளனர். இம் மக்களுக்காக இதுவரையில் எந்தவொரு சர்வதேச நிறுவனமும் உதவ முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இதன்போதே நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
1983 காலப் பகுதிக்கு பிறகு இலங்கையில் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் பாரிய ஒற்றுமை காணப்பட்டது. ஆனால் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் இருபாலாரினதும் ஒற்றுமை ஓரளவில் சரிந்தாலும் தென் பகுதிகளில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழக் கூடிய சூழல் காணப்பட்டது. தற்போது புலி பயங்கரவாதிகள் அடியோடு அழிக்கப்பட்டு விட்டனர்.
சுதந்திரமடைந்துள்ள இலங்கையில் அனைத்து மக்களுக்கும் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வரக் கூடிய உரிமையுள்ளது. யுத்தத்தில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமையால் கடந்த ஒன்றரை வருட காலமாக அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு பொறுத்திருந்தோம். தற்போது அந்த பிரச்சினை சுமூக நிலையை அடைந்துள்ளமையால் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் சென்று குடியேறுகின்றனர்.
இதனை இனவாதமோ திட்டமிட்ட குடியேற்றமாகவோ கருத முடியாது. தமிழ் மக்களுக்கான மீள்குடியேற்றத்தில் காட்டிய அக்கறையை அரசாங்கமோ சர்வதேச அமைப்புகளோ சிங்கள மக்கள் விடயத்தில் காட்டுவதில்லை. எனவே ஐ.நாலவின் இடம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச கொள்கையுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து சிங்கள மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’