வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் அடையாளம் காணமுடியாதுள்ளது என தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
.கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதிங்கியிருந்தது. அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சியும் அணிந்திருந்தார். இதிலிருந்து அவர் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளது என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’