வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 நவம்பர், 2010

எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இன அடிப்படையில் அதிகாரத்தை பகிரக்கூடாது: பெங்கமுவே நாலக்க

டக்கு கிழக்கில் இன நெருக்கடி எதுவும் காணப்படவில்லை. அவ்வாறான பிரச்சினை ஒன்றை மக்கள் உருவாக்கவில்லை. மாறாக, தமிழ் அரசியல்வாதிகளும் சில சிங்கள அரசியல்வாதிகளும் உருவாக்கிய பிரச்சினையே கடந்த 30 வருடங்களாக நிலவியது. அதனை ஜனாதிபதி முடித்துவிட்டார். எனவே, எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இன அடிப்படையில் அதிகாரத்தை பகிரக்கூடாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைவரும் சிங்கள மொழியை கற்பது அவசியமாகும். ஆனால் யாரும் விரும்பினால் எத்தனை மொழிகளையும் கற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

பெங்கமுவ நாலக்க தேரர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்

கடந்த 30 வருடங்களாக நாட்டில் பாரிய பயங்கரவாத பிரச்சினை நிலவியது. நான் யுத்த காலத்தில் அடிக்கடி வடக்கு பிரதேசங்களுக்கு சென்று பொது மக்களுடனும் படையினருடனும் உரையாடிவந்துள்ளேன். கடந்த 24 வருடங்களாக நான் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளேன். எனவே என்னிடம் அதிகமானளவு அனுவங்கள் உள்ளன. அதாவது வடக்கு கிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் நான் இணைந்து செயற்பட்டு வந்துள்ளேன்.
எனது அனுபவங்களின் ஊடாக நான் ஒரு விடயத்தை புரிந்துகொண்டேன். அதாவது வடக்கு கிழக்கு மக்களிடையே இனப்பிரச்சினை நிலவவில்லை. காரணம் நான் வடக்குக்கு செல்லும்போதேல்லாம் அப்பகுதி மக்கள் என்னை கௌரவமாகவே நடத்தினர். திருகோணமலைக்கு ஒரு முறை நான் சென்றிருந்தபோது சைவ ஹோட்டல் ஒன்றுக்கு உணவு உட்கொள்ள சென்றிருந்தேன். சாதாரணமாக சைவ ஹோட்டல்களில் உணவுப் பரிமாறப்படும் விதம் வித்தியாசமானது. அதாவது உணவு உண்பவரே இலையை அகற்றவேண்டும். ஆனால் என்னை அவ்வாறு நடத்தாமல் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் கௌரவித்தனர்.
மேலும் அக்காலத்தில் திருகோணமலை மாவட்ட செயலாளராக இருந்த சந்திரதாச ஒரு விடயத்தை என்னிடம் கூறியிருந்தார். அதாவது அப்பிரதேச மக்கள் சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக வருவதையே விரும்புவதாக என்னிடம் கூறியிருந்தார். மேலும் மட்டக்களப்பு மக்கள் ஒரு தடவை என்னுடன் உரையாடும்போது தங்களுக்கு சிங்களவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு கோரியிருந்தனர். தாங்கள் அவரை வெற்றிபெற வைப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பொன்னாலை பிரதேசத்துக்கு ஒருமுறை நான் சென்றிருந்தேன். அங்கு தமிழ் அதிகாரிகள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு சிங்களம் தெரிந்திருக்காது என்று கருதி நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடினேன். ஆனால் அவர்கள் என்னுடன் சிங்களத்தில் உரையாடினர். அப்போது அவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன். அதாவது யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நீங்கள் எந்த அரசியல் கட்சியை விரும்புகின்றீர்கள் என கேட்டேன்.
அதற்கு அவர்கள் தாங்கள் எந்தக் கட்சியையும் விரும்பவில்லை என்று குறிப்பி“ட்டனர். மாறாக தம்முடன் சிங்கள இராணுவத்தினர் இருந்தால் போதுமானது என்று குறிப்பிட்டனர். அதற்கு சில காரணங்களையும் கூறினர். அதாவது இராணுவம் தங்களுடன் இருக்கும்போது தமது சிறுவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் உணவு இல்லாத போது உணவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டனர். அத்துடன் சாதாரண மக்கள் ஒருபோதும் தனிநாட்டைக் கோரவில்லை.
எனவே இந்தப் பிரச்சினைக்கு இரண்டு தரப்பினர் பொறுப்புக்கூறவேண்டும். தமிழ் அரசியல்வாதிகளும் சில சிங்கள அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூறவேண்டும். சிறுபான்மை என்ற வசனத்தை சிலர் பிரயோகிக்கின்றனர். இந்த வசனம் உருவாக்கப்பட்டுள்ளது. மைனோரிட்டி என்ற ஆங்கில வார்த்தைக்கு சிறுபான்மையினர் என்று அர்த்தம் வராது. இடதுசாரி கட்சிகளே தங்கள் அரசியலுக்காக இந்த சிறுபான்மை என்ற எண்ணக்கருவை உருவாக்கி வந்தனர். எனவே எமது நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டவேண்டும். தற்போது பயங்கரவாதம் முடிந்துவிட்டது. எனவே இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையானது இதற்கு பின்னர் ஒரு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’