தி தினக்குரல் ஊழியர்களின் தொலை பேசி அழைப்பை அடுத்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாகவே நேரில் சென்று நடவடிக்கை! புகைப்படம் இணைப்பு
யாழ் தினக்குரல் அலுவலகத்தின் அருகே நேற்று நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் நிற்பதை அவதானித்திருந்த தினக்குரல் ஊழியர்கள் தம்மை பாதுகாக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அவசர தொலை பேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தனர்.
அப்போது நள்ளிரவு 2 மணி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பில் இருந்து கொடிகாமம் பகுதி ஊடாக யாழ் நோக்கி சென்று கொண்டிருந்தார். தினக்குரல் ஊழியர்களின் அவசர அழைப்பை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களோடு தொடர்பு கொண்டதை அடுத்து உடனடியாகவே தினக்குரல் அலுவலகம் நோக்கி பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனாலும் பொலிஸார் அங்கு விரைந்த போது அச்சுறுத்த வந்திருந்தவர்கள் எவரும் அங்கு நின்றிருக்கவில்லை. யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் நகரை அடைந்ததும் நேரடியாகவே தினக்குரல் அலுவலகம் நோக்கி விரைந்து சென்றதோடு அச்சுறுத்தலில் சிக்கியிருந்ததாக அறிவித்திருந்த தினக்குரல் ஊழியர்களோடு கலந்துரையாடி ஆறுதல் அளித்து நிலைமைகளை நேரில் விசாரித்தும் இருந்தார். தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போது உடன் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு நேரடியாகவும் சென்று தம்மோடு கலந்துரையாடி நிலைமைகளை விசாரித்தறிந்து ஆறுதல் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தினக்குரல் ஊழியர்கள் மகிழ்ச்சியோடு நன்றியும் தெரிவித்திருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’