வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 நவம்பர், 2010

'நிவாரண கிராமத்திலிருந்து மக்கள் பலவந்தமாக இடமாற்றம்'

செட்டிகுளம், மெனிக்பாம் வலயம் 4 நிவாரண கிராமத்தில் உள்ளவர்கள் கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு பலவந்தமாக இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்த இடமாற்ற நடவடிக்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மெனிக்பாம் வலயம் 4 நிவாரண கிராமம் மூடப்படவுள்ள நிலையில் அங்கு தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் அருகாமையில் உள்ள கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எம்.எம்.எஸ்.சாள்ஸ் தொடர்பு கொண்டு வினவிய போது,
அரசாங்க உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே வலயம் 4 இல் வசித்த மக்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’