இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு கத்தோலிக்க மதகுருமார் காணாமல்போயிருப்பதாக மட்டக்களப்பு ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக தெரிவித்திருக்கிறார்.
இந்தக் காலப்பகுதியில் பல மக்கள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு கத்தோலிக்க மதகுரு காணமல்போனதாகவும், அடுத்ததாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த, 70 வயதான அருட்தந்தை ஜோசப் பிரான்ஸிஸ் அவர்கள் போர் முடிவடைந்த பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் காணமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை விரைவில் கார்டினலாக வரவுள்ள கொழும்பு மறைமாவட்ட ஆயரான மல்கம் ரஞ்சித் அவர்கள் தனது சாட்சியத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்கள் இன வீதத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேபோன்று வேறு மூத்த கத்தோலிக்க மதகுருமாரும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் சாட்சியமளித்துள்ளார்கள்.
27 ஆண்டுகளாக அமலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற அவர்களது வாதத்தை , அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வாதிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’