வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 நவம்பர், 2010

மீனவர்களை தாக்கிய குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படை நிராகரிப்பு

லங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று அதிகாலை தாக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படை நிராகரித்துள்ளது.

சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 15 பேர் காயமடைந்ததாகவும் தமிழக கரையோர மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இலங்கைக் கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத்திடம்  இணையத்தளம் கேட்டபோது, எந்தவொரு மீனவரையும் இலங்கை கடற்படையினர் தாக்கவில்லை எனவும் அடிக்கடி இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் கூறினார்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் சிலர் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விதிகளை மீறுவதாகவும் இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதால் பதற்றநிலைக்கு வழிவகுப்பதாகவும் இந்திய மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’