இஸ்லாமிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கு இடையே இருக்கும் தவறான புரிதல்களையும், நம்பிக்கையின்மையையும் முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவுக்கான தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக இந்தோனேசியா சென்றடைந்துள்ள பராக் ஒபாமா அங்கே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
உலகில் மிக அதிகமாக இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவின் அதிபர் சுசிலோ பாம்பாங் யூதோயோனாவுடன் கூட்டாக ஜகார்த்தாவில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்திலேயே இந்தக் கருத்தை பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவின் முயற்சிகள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் அது இன்னும் முழுமை பெறவில்லை எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதமும், தீவிரவாதமுமே மேற்குலகுக்கும் இஸ்லாமிய உலகத்துக்கும் இடையேயான உறவை ஆக்கிரமித்துள்ளன எனத் தெரிவித்துள்ள பராக் ஒபாமா, அந்த உறவுகள் பாதுகாப்பு விடயங்களை கடந்த ஒன்றை கடந்ததாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
1960 களில் தனது இளமை பருவத்தில் நான்கு ஆண்டுகள் பராக் ஒபாமா இந்தோனேசியாவில் கழித்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தம் உட்பட பல்துறைகளில் இந்தோனேசியாவுடனான பரந்து பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’