தென்கோடியில் ஆஸ்ரேலியா முதல், ஐரோப்பாவின் அனைத்து நாடுகள், பிரித்தானியா மற்றும் வடக்கே கனடா வரை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
அனைத்து இடங்களிலும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், இந்த நிகழ்வுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மேற்கத்தைய நாணயங்கள் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போர் முடிந்து போன இலங்கையில், இந்த தமிழர்களால் மாவீரர்கள் என்று அழைக்கப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்துக்காக தமது உயிர்களை பலிகொடுத்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் குடும்பங்கள் பல எந்தவிதமான உதவிகளும் இன்றி சிரமப்பட்டுக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள் இந்த நிகழ்வை பெரும் எடுப்பில் அனுட்டித்தாலும், அவர்களின் மத்தியில் பிளவுகள் அதிகரித்திருப்பதோடு, அவர்களால் கடந்த ஒன்றரை வருடத்தில் ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அதனை மறுக்கிறார் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சாம் கிருஷ்ணா.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் 'மாவீரர் துயிலும் இல்லங்கள்' தகர்க்கப்பட்டுவிட்டன |
விடுதலைப்புலிகளின் கல்லறைகளைக் கூட இலங்கை அரசாங்கம் இடித்து விட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். கார்த்திகை தீப விழாவுக்காக வீடுகளில் தீபமேற்றியவர்கள்கூட இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
ஆனால், தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்று கூறும் இலங்கையின் பிரித்தானியாவுக்கான துணைத்தூதுவர் அம்சா, இந்த நிகழ்வுகளை சட்ட விரோதமான நிகழ்வுகளாகவே தாம் பார்ப்பதாகக் கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’