வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 நவம்பர், 2010

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேரூனும், பிரான்ஸ் அதிபர் நிகலோஸ் சர்கோசியும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கக் கூடிய இரு பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஆங்கிலோ பிரஞ்சு அதிரடிப் படைகள் கூட்டு பயிற்சிகளை மெற்கொள்ளவும், இரு நாடுகளும் குறைந்தது ஒரு விமானந்தாங்கி கப்பலை தயார் நிலையில் வைத்திருக்கவும் இவை வழிவகை செய்யும்.

தங்கள் வசமுள்ள அணு ஆயுதங்களின் திறனை சோதித்துப் பார்க்க வழி செய்யவும் சோதனைக் கூடங்களை நிறுவவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் பணம் சேமிக்கப்படுவதுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் கூறியுள்ளனர். இரு நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படாது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
பனிப் போர் முடிவுக்கு வந்த பிறகு மேற்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் காலனி ஏகாதிபத்திய நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் தமது இராணுவச் செலவுகளை தொடர்ந்து குறைத்து வந்தன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு இந்த நாடுகளை மேலும் புதிய திசையில் அழைத்துச் சென்றுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை வரலாற்றுச் சிறப்பு வாயந்த ஒன்று என்று பிரான்ஸ் அதிகாரிகளும், இது யதார்த்தமானது வழி என்று பிரிட்டிஷ் அதிகாரிகளும் வர்ணித்துள்ளனர்.
பிரிட்டனின் முப்படையில் உள்ளோரின் மொத்த எண்ணிக்கை தற்போது இரண்டு லட்சத்துக்கு சற்று குறைவாக உள்ளது. பிரான்சில் இது சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரமாக உள்ளது.
இந்த இரு நாடுகளும் உலகளாவிய அளவில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் அதை சுயமாக மேற்கொள்ளத் தேவையான வளங்கள் இல்லாததன் காரணமாகவே இந்த ஒப்பந்ததிற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக பிபிசியின் உலக விவகார செய்தியாளர் கூறுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’