வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 நவம்பர், 2010

யாழ். மாவட்ட பொது நிர்வாக மற்றும் திணைக்கள தலைவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உயர்மட்ட சந்திப்பு.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாவட்ட பொது நிர்வாக மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் ஆகியோருடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உயர்மட்ட சந்திப்பொன்றினை மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கம் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள் யாழ். விவசாய உதவிப் பணிப்பாளர் பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதிப் பொது முகாமையாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் நீர்ப்பாசன திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்குகொண்டனர்.

இவ்வுயர்மட்ட சந்திப்பில் மீள்குடியேற்றம் இம்மாதம் 19ம்திகதி மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மர நடுகைத்திட்டம் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இது தொடர்பாக விசேட தேவையுடைய அல்லது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பமொன்றிற்கு வீடமைத்துக் கொடுத்தல் கழிவகற்றல் செயற்பாடுகளை கொத்தணி அடிப்படையிலான உள்ளுராட்சி சபைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாப்பான மலசலகூட கழிவகற்றல் குடாநாடெங்கும் அனுமதியற்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாதைகளை அகற்றுதல் பிரதேச செயலகங்களை அந்தந்த பிரதேசங்களின் பெயரால் அழைத்தல் வீதி அபிவிருத்தி குறிப்பாக உள்ளுர் ஒப்பந்தகாரர்கள் மூலம் வீதி தரமான புனரமைப்பு மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

அரச உயரதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி நீங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் பிரதேச ரீதியான அபிவிருத்திகளை எதிர்வரும் நாட்களில் நேரடியாகவே வந்து தான் பார்வையிடவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவர்கள் இந்நடவடிக்கையானது குற்றங்களை கண்டுபிடிக்க அல்ல என்பதுடன் உற்சாகப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவே எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் நிறைவாக பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தத்தமது கோரிக்கைகளைத் தெரியப்படுத்தி உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’