அக்கறையுடன் செயல்பட்டுவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகளின் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நான்கு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்தடைந்தார். விமானத்தில் தம்முடன் வந்த செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா,
"இலங்கை போரில் அகதி முகாம்களில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தில் இருந்து தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கிறது.
தமிழர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைந்து நிறைவேற்ற இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக 850 கோடி ரூபாய் இந்தியா வழங்கவிருக்கிறது.
தமிழர் பகுதியில் இந்தியா சார்பில் முதற்கட்டமாக 1000 வீடுகள் கட்டப்படுகின்றன. அதன் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இலங்கையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முக்கியமாக தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இனி நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுகள் மூலம் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது. எனது இந்தப் பயணம் அதிகாரப்பகிர்வு பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும்.
கடந்த ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், ராஜபக்ஷ பேசினார். அப்போது அதிகாரப்பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்" என்று தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’