நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சேவைகள் அமையப்பெற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவைக்கான நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்து தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- அரசாங்கத்துக்கு பாரியதொரு பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லும் பாரியதொரு கடமையும் அமைச்சர்கள் வசம் உள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும் கடப்பாடு காணப்படும் இத்தருணத்தில் அமைச்சர்கள் தங்களது கௌரவத்தை மாத்திரமே கருத்திற் கொண்டு செயற்படாது பொது மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் உருவாகும் வகையிலும் அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையிலும் செயற்பட வேண்டும்.
அமைச்சர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் அரசாங்கத்தின் கருத்தாகவே அமைவதால் அது குறித்து அவர்கள் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் அரசாங்கத்துக்கு அகௌவரத்தை ஏற்படுத்தாத வகையிலும் அமைய வழிசமைத்துக்கொள்ள வேண்டும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’