வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 நவம்பர், 2010

சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை நிர்மாணம்; இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு

பிரான்ஸில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலைக்கு தடை விதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் பாரிஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் பிரான்ஸின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள லா கோர்னியூவ் நகர மேயருக்கு எழுத்து மூலமான கோரிக்கைக் கடிதமொன்று மேற்படி உயர்ஸ்தானிகராலயத்தினால் கையளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழர் அதிகமாக வாழும் லா கோர்னியூவ் நகரில் மேற்படி சிலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அடிக்கல் ஏற்கனவே நடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்கு ஜேர்மன் மற்றும் பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சார்பான இந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி நகர மேயர் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’