வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 நவம்பர், 2010

சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையங்கள் முற்றுகை

வென்னப்புவ மற்றும் வைக்கால பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட முற்றுகைளின்போது பெருமளவில் சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்கும் மறைவிடங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நடவடிக்கைகளின்போது, 70 பீப்பாய் கசிப்பு மற்றும் 40 போத்தல் சட்டவிரோத மதுபானம், மதுபானம் தயாரிப்பதற்கான பொருட்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக மூவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை.
இச்சட்டவிரோத மதுபான வியாபாரம் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளையடுத்து மேற்படி முற்றுகை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாரவில நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’