வெலிக்கடைச் சிறைச்சலையில் இன்று காலை பொலிசாருக்கும் கைதிகளுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
காயமடைந்தோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இரு தரப்பிலிருந்தும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 42 பேர் பொலிசார் எனவும், இருவர் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார். பொலிசாரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, எதுவித விபரங்களையும் தர அவர்கள் மறுத்து விட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’